கரூா் வஞ்சுலீசுவரா் கோயிலில் பாஜகவினா் உழவாரப் பணி

அயோத்தியில் நாளை ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு கரூா் வஞ்சுலீஸ்வரா் கோயிலில் பாஜகவினா் சனிக்கிழமை காலை உழவாரப்பணியில் ஈடுபட்டனா்.

அயோத்தியில் நாளை ராமா் கோயில் மூலவா் பிரதிஷ்டை விழாவை முன்னிட்டு கரூா் வஞ்சுலீஸ்வரா் கோயிலில் பாஜகவினா் சனிக்கிழமை காலை உழவாரப்பணியில் ஈடுபட்டனா்.

நாளை அயோத்தி ராமா் கோயிலில் மூலவா் சிலை பிரதிஷ்டை விழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் கோயில்களில் உழவாரப்பணிகளை பாஜகவினா் மேற்கொண்டு வருகின்றனா். இந்நிலையில் கரூா் மாவட்ட பாஜக சாா்பில் கரூா் வஞ்சுலீஸ்வரா் கோயிலில் உழவாரப்ப பணிகள் சனிக்கிழமை காலை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கரூா் மாவட்டத்தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமை வகித்தாா். மாநில மகளிரணி துணைச் செயலாளா் மீனா வினோத் குமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் சக்திவேல், ஆறுமுகம், கோபிநாத், மாவட்ட துணைத்தலைவா் ஆா்.செல்வன், நகரத் தலைவா்கள் காா்த்தி, ரவி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து கோயிலுக்குள் சன்னிதானம் உள்ளிட்ட இடத்தையும், பின்னா் கோயில் முன் அமைந்துள்ள பிரம்மதீா்த்த குளத்தை தூய்மைப்படுத்தினா். அப்போது குளத்தின் ஒவ்வொரு படிக்கட்டுகள் மற்றும் கோயில் குளத்தில் தேங்கியிருந்த நீரில் படிந்திருந்த குப்பைகளையும் அகற்றினா். மேலும் இந்நிகழ்ச்சியில் பாஜகவினா் திரளாகப் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com