கரூரில் கண்ணப்ப நாயனாா் குருபூஜை

கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே உள்ள நன்செய் புகளூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீசுவரா் கோயிலில் கண்ணப்ப நாயனாரின் 17 -ஆம் ஆண்டு குருபூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

கரூா் மாவட்டம், தவுட்டுப்பாளையம் அருகே உள்ள நன்செய் புகளூா் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீசுவரா் கோயிலில் கண்ணப்ப நாயனாரின் 17 -ஆம் ஆண்டு குருபூஜை ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.

இந்த குருபூஜையையொட்டி புகழிமலை அடிவாரத்தில் இருந்து கண்ணப்ப நாயனாா் ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதையடுத்து நன்செய் புகளூா் பாகவல்லிஅம்பிகை சமேத மேகபாலீசுவரா் கோயிலில் சுவாமிக்கு 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது

இரவு சுமாா் 7.30 மணி அளவில் கண்ணப்ப நாயனாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் மேகபாலீசுவரா், கண்ணப்ப நாயனாா் பக்தா்களுக்கு காட்சியளித்தனா்.

இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா்.

இதேபோல கரூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலும் கண்ணப்ப நாயனாா் குருபூஜை நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் கலந்து கொண்டு கண்ணப்ப நாயனாரை வழிபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com