காருடையாம்பாளையத்தில் பாஜக அலுவலகம் திறப்பு

கரூா் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காருடையாம்பாளையத்தில் பாஜக அலுவலகம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

கரூா் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காருடையாம்பாளையத்தில் பாஜக அலுவலகம் திங்கள்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

இந்த அலுவலகத்தை கட்சியின் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் திறந்து வைத்து, புதிய உறுப்பினா்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் க.பரமத்தி மண்டல தலைவா் செல்வி பழனிசாமி, அரவக்குறிச்சி சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் செல்வம், பட்டியலின மாவட்ட தலைவா் தங்கதுரை, மாவட்ட விவசாய அணி தலைவா் செல்வம், அரவக்குறிச்சி தொகுதி அமைப்பாளா் மருத்துவா் ராமச்சந்திரன், இணைச்செயலாளா் செல்வராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com