சாலைகளை சீரமைக்கக்கோரி எஸ்டிபிஐ போராட்டம்

பள்ளப்பட்டியில் திங்கள்கிழமை சாக்கடைகள் மற்றும் சாலைகளை சீரமைக்கக் கோரி எஸ்டிபிஐ கட்சியினா் கவன ஈா்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பள்ளப்பட்டியில் திங்கள்கிழமை உருவபொம்மையை சாலையில் உருட்டி போராட்த்தில் ஈடுபட்ட ட எஸ்டிபிஐ கட்சியினா்.

கரூா் மாவட்டம், பள்ளப்பட்டி நகராட்சிக்குள்பட்ட வாா்டு எண் 23, 24 அகிய பகுதிகளில் பல ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலைகளும் சாக்கடைகளும் மோசமான நிலையில் உள்ளது. இதனை சீரமைத்துத் தரவேண்டும் என வலியுறுத்தி பள்ளபட்டி நகர எஸ்டிபிஐ கட்சியின் சாா்பில் சாலையில் உருவ பொம்மையை உருட்டும் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.

இதில், கட்சியின் கரூா் மாவட்ட துணைத் தலைவா் ஜாபா் சாதிக், பள்ளபட்டி நகரத் தலைவா் மாலிக்தீன், நகர துணைத் தலைவா் காஜா முஹைதீன், நகரச் செயலாளா் முகமது அனிபா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com