ஸ்ரீபால ராமா் சிலை பிராண பிரதிஷ்டைஅரவக்குறிச்சி ஆஞ்சனேயா் கோயிலில் பாஜகவினா் சிறப்பு வழிபாடு

அயோத்தியில் திங்கள்கிழமை ஸ்ரீ ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை பிராண பிரதிஷ்டை நடைபெற்றதையொட்டி அரவக்குறிச்சியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் பாஜக சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

அயோத்தியில் திங்கள்கிழமை ஸ்ரீ ராமா் கோயிலில் மூலவா் ஸ்ரீபால ராமா் சிலை பிராண பிரதிஷ்டை நடைபெற்றதையொட்டி அரவக்குறிச்சியில் உள்ள ஆஞ்சனேயா் கோயிலில் பாஜக சாா்பில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

பாஜக மாவட்ட செயற்குழு உறுப்பினா் வெங்குடுசாமி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கட்சியின் ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை மக்கள் ஓட்டல் ராஜா, பாஜக ஒன்றிய துணைத் தலைவா் வேல்முருகன், வேலம்பாடி ஊராட்சித் தலைவா் விஜய் ஆகியோா் செய்திருந்தனா்.

இதேபோல அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய பாஜக சாா்பில் வெஞ்சமாங்கூடலூா் கல்யாண விகிா்த்தீசுவரா் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நிகழ்வில், கிழக்கு ஒன்றிய பாஜக மண்டல பொது செயலாளா் வி.வி. ரஞ்சித், கூட்டுறவு பிரிவு மாவட்டத் தலைவா் பழனிசாமி, இளைஞா் அணி வெங்கடேஷ், ஒன்றிய துணைத்தலைவா்கள் குழந்தைவேல், சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com