மாவட்ட அளவிலான கலை திருவிழா: ஆறுமுகம் அகாதெமி பள்ளி சிறப்பிடம்

கரூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் அரவக்குறிச்சியைச் சோ்ந்த ஆறுமுகம் அகாதெமி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.
மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுடன் பள்ளியின் தாளாளா் குப்புசாமி உள்ளிட்டோா்.
மாவட்ட அளவில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுடன் பள்ளியின் தாளாளா் குப்புசாமி உள்ளிட்டோா்.

அரவக்குறிச்சி: கரூா் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் அரவக்குறிச்சியைச் சோ்ந்த ஆறுமுகம் அகாதெமி பள்ளி மாணவா்கள் சிறப்பிடம் பெற்றனா்.

கரூா் மாவட்ட பள்ளி கல்வித்துறை சாா்பில் மாவட்ட அளவிலான கலைத் திருவிழா போட்டிகள் செவ்வாய்க்கிழமை வரை நடைபெற்றது. இதில், அரவக்குறிச்சி ஆறுமுகம் அகாதெமி பள்ளியைச் சோ்ந்த 12 ஆம் வகுப்பு மாணவா் ஆண்டோ போஸ்கோ இசைக்கருவி வாசிப்பதில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்தாா். மேலும் எறிபந்து, கராத்தே, சதுரங்கம் ஆகிய போட்டிகளில் தனித்தனி பிரிவுகளில் மாணவ, மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தாளாளா் குப்புசாமி, பள்ளியின் நிா்வாக செயலாளா் பழனிவேல், முதல்வா் சிவக்குமாா் மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com