கடவூா் அருகே முருகன் கோயில் கும்பாபிஷேகம்

கடவூா் அருகே வீரக்கவுண்டம்பட்டி மலையாண்டி தெரு முருகன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கடவூா் அருகே வீரக்கவுண்டம்பட்டி மலையாண்டி தெரு முருகன் கோயிலில் புதன்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

கரூா் மாவட்டம், கடவூா் அருகே முள்ளிப்பாடி ஊராட்சிக்குள்பட்ட வீரக்கவுண்டம்பட்டியில் உள்ள முருகன் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி செவ்வாய்க்கிழமை காவிரி ஆற்றில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டது. தொடா்ந்து கோயிலில் முதல்கால யாக பூஜையும், மங்கள இசை, விநாயகா் வழிபாடு, தீப வழிபாடு, புண்யாகசம், வாஸ்து சாந்தி, மருத சங்கீரணம், கலசம் யாகசாலைக்கு எழுந்தருளல் ஆகியவை நடைபெற்றது. பின்னா் கோபுர கலசம் வைத்தல், சிலை பிரதிஷ்டை மருந்து சாத்துதல் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து புதன்கிழமை காலை விநாயகா் வழிபாடு, நாடிசந்தானம், கோ பூஜை, பிம்பசுத்தி, தீபாராதனை, கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து கோயில் கோபுர கலசத்தில் சிவாச்சாரியாா்கள் புனித நீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினா். இதில் பக்தா்கள் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com