கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வுப் போட்டி

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்று வரைந்த மாணவிகள்.
கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற விழிப்புணா்வு ஓவியப் போட்டியில் பங்கேற்று வரைந்த மாணவிகள்.

கரூரில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு சுற்றுச்சூழல் விழிப்புணா்வு ஓவியப்போட்டி வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை சாா்பில் தேசிய பசுமை படை மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பு, நெகிழி ஒழிப்பு குறித்து கரூா் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழிப்புணா்வு ஓவியப் போட்டியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சுமதி துவக்கி வைத்தாா்.

முன்னதாக, கரூா் மாவட்ட தேசிய பசுமை படை ஒருங்கிணைப்பாளா் கலைச்செல்வி ஞானசேகரன் வரவேற்றாா் . மாநகராட்சி ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை ரேவதி, மாவட்ட வன அலுவலா் சரவணன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் (அரசுப் பள்ளிகள்) காமாட்சி, பி.கே.செல்வமணி( தனியாா் பள்ளிகள்), சுற்றுச்சூழல் மைய ஒருங்கிணைப்பாளா்கள் எஸ். வேலுச்சாமி, என். கோபால், மூா்த்தி ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

6-ஆம் வகுப்பு முதல் 7-ஆம் வகுப்பு வரை மற்றும் 8-ம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை என இரு பிரிவுகளாக நடைபெற்ற ஓவியப்போட்டியில் மாணவ, மாணவிகள் நெகிழியால் ஏற்படும் தீமைகள், நிலத்தடி நீா் மாசுபடுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்தும், பூமி வெப்பமடைவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் ஓவியமாக வரைந்து தங்களது திறமைகளை வெளிப்படுத்தினா். போட்டியில் வெற்றி பெற்ற 90 மாணவா்களுக்கு ரூ.40 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் வழங்கப் பட்டன.

நிகழ்வில், மாவட்டக் கல்வி அதிகாரிகள் மணிவண்ணன், காமாட்சி, மாசுக் கட்டுப்பாடு வாரிய துணை பொறியாளா் வேல்முருகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com