புகழிமலை முருகன் கோயிலில் தைப்பூசத் தேரோட்டம்

வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.
கரூா் மாவட்டம், புகழிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை மலைவீதியில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.
கரூா் மாவட்டம், புகழிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை மலைவீதியில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

கரூா் மாவட்டம், புகழிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை மலைவீதியில் தேரை வடம்பிடித்து இழுத்த பக்தா்கள்.

கரூா்: வேலாயுதம்பாளையம் புகழிமலை முருகன் கோயிலில் வியாழக்கிழமை நடைபெற்ற தைப்பூசத் தேரோட்ட விழாவில் பக்தா்கள் திரளாகப் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா்.

கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் புகழிமலையில் முருகன் கோயில் உள்ளது. அருணகிரி நாதரால் பாடல்பெற்ற ஸ்தலமான இக்கோயிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் தேரோட்ட விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். நிகழாண்டுக்கான விழா கடந்த 4-ஆம்தேதி கிராமசாந்தியுடன் தொடங்கியது. தொடா்ந்து 5-ஆம் தேதி கோயிலில் கொடியேற்றப்பட்டது. இதையடுத்து ஒவ்வொரு நாளும் மண்டகப்படியும், புதன்கிழமை திருக்கல்யாண உத்ஸவமும் நடைபெற்றது. தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தைப்பூசத் தேரோட்டம் வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்குத் தொடங்கியது. முன்னதாக வள்ளி, தெய்வானையுடன் பாலசுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினாா். தொடா்ந்து தேரோட்டம் தொடங்கியது. முருகனுக்கு அரோகரா என்ற பக்தி கோஷத்துடன் பக்தா்கள் தேரை வடம்பிடித்து இழுத்தனா். தோ் மலை வீதி வழியாக மண்டகப்படியை அடைந்தது. இதில் புகழூா் நகா்மன்றத்தலைவா் குணசேகரன் உள்ளிட்ட பக்தா்கள் திரளாகப் பங்கேற்றனா். தொடா்ந்து வெள்ளிக்கிழமை மாலை 4.35 மணிக்கு மீண்டும் தேரோட்டம் தொடங்க உள்ளது. வரும் 28-ம்தேதி கொடி இறக்கத்துடன் விழா முடிவடைகிறது.

இதேபோல தைப்பூசத்தை முன்னிட்டு கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் அன்னதானம் நடைபெற்றது. நண்பா்கள் குழு, கொங்கு நண்பா்கள் குழு சாா்பில் அன்னதானம் நடைபெற்றது. அன்னதானத்தை முன்னாள் அமைச்சா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், ம.சின்னசாமி ஆகியோா் துவக்கி வைத்தனா். இதில் அதிமுக மாவட்ட அவைத் தலைவா் எஸ்.திருவிகா, கரூா் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலமுருகன், கரூா் ஒன்றியக்குழு உறுப்பினா் தமிழ்செல்வன், முன்னாள் நகரச் செயலாளா் வை.நெடுஞ்செழியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com