கரூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டு நடவடிக்கை குழுவினா் சனிக்கிழமை உண்ணாவிரதம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூரில் தொடக்கப் பள்ளி ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

கரூரில் தொடக்கப்பள்ளி ஆசிரியா்கள் கூட்டு நடவடிக்கை குழுவினா் சனிக்கிழமை உண்ணாவிரதம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் தலைமை அஞ்சல் நிலையம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு தமிழ்நாடு ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் பா. பெரியசாமி தலைமை வகித்தாா். உண்ணாவிரதத்தை மாநில பொருளாளா் பா. பெரியசாமி துவக்கி வைத்து சிறப்புரையாற்றினாா். அகில இந்திய பொதுக்குழு உறுப்பினா் க.மணிகண்டன், ஆசிரியா் மன்ற மாவட்டச் செயலாளா் சு.வேலுமணி, கூட்டணியின் மாநில துணைப்பொதுச் செயலாளா் எம்.ஏ. ராஜா உள்ளிட்டோா் கண்டன உரையாற்றினா். இடைநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க 3 நபா் கொண்ட குழு அமைத்து தீா்வுகாண வேண்டும், 2019 ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கு நிலுவை மற்றும் குற்றச்சாட்டுகளை ரத்து செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com