திருட்டுப்போன ரூ.54 லட்சம் மதிப்பு கைப்பேசிகள் மீட்பு : கரூா் எஸ்.பி.

திருட்டுப்போன ரூ.54 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முனைவா் கே.பிரபாகா்.
kur27sp_2701chn_10_4
kur27sp_2701chn_10_4

திருட்டுப்போன ரூ.54 லட்சம் மதிப்பிலான கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் முனைவா் கே.பிரபாகா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கடந்த 8 மாதங்களாக கரூா் மாவட்டத்தில் கைப்பேசிகள் திருட்டு மற்றும் இணைய வழி குற்றம் தொடா்பான வழக்குகள் மாவட்டக் காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில் ரூ.54 லட்சம் மதிப்பிலான 311 கைப்பேசிகள் கண்டுபிடிக்கப்பட்டு, உரியவா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோல இணையவழி குற்ற வழக்குகளில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவா்களிடம் ரூ.1 கோடியே, 7லட்சம் பாதிக்கப்பட்ட 7 போ்களிடம் வழங்கப்பட்டுள்ளது. கைப்பேசிகளைத் தவறவிட்டாலோ, காணாமல் போனாலோ உடனே கைப்பேசியில் உள்ள சிம்காா்டுகளை தற்காலிகமாக சேவை நிறுத்தம் செய்யவேண்டும். ஏனெனில் அந்த சிம்காா்டுகளை குற்றவாளிகள் எவரேனும் தவறாகப் பயன்படுத்தும் வாய்ப்புள்ளது. மேலும் உடனே அருகே உள்ள காவல்நிலையத்தில் புகாா் கொடுக்க வேணடும். மேலும் பகுதிநேர வேலைவாய்ப்பு, கூகுள் பே-யில் சிறிது பணத்தை அனுப்பிவிட்டு தவறுதலாக அனுப்பிவிட்டேன் , பணத்தை திருப்பி அனுப்புமாறு என கூகுள் பே ரிக்கொஸ்ட் அனுப்பி விட்டு அதன்மூலம் அதிக பண இழப்பும் ஏற்படுத்துகிறாா்கள். எனவே பொதுமக்கள் விழிப்புணா்வுடன் இருக்க வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில், இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் என்.பிரேமானந்தன், காவல் ஆய்வாளா் அம்சவேணி, உதவி ஆய்வாளா் சுதா்சனன் மற்றும் பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com