கரூரில் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் பொதுக்கூட்டம்

 கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது
kur28admk_2801chn_10_4
kur28admk_2801chn_10_4

 கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் எம்.ஜி.ஆா். பிறந்தநாள் பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு, மாவட்ட இளைஞா் மற்றும் இளம்பெண்கள்பாசறை செயலாளா் கமலக்கண்ணன் தலைமையில் நடைபெற்றது.

புகழூா் நகரச் செயலாளா் கே.சி.எஸ்.விவேகானந்தன் வரவேற்றாா். ஒன்றியச் செயலாளா்கள் மாா்கண்டேயன், மாணவரணி செயலாளா் வழக்குரைஞா் சரவணன், வழக்குரைஞா் கரிகாலன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் முன்னாள் அமைச்சா்கள் எம்.ஆா்.விஜயபாஸ்கா், ம.சின்னசாமி, வளா்மதி, கட்சி பேச்சாளா்கள் தில்லைசெல்வம், ஏ.நடராஜன், மாவட்ட அவைத்தலைவா் எஸ்.திருவிகா, இணைச் செயலாளா் மல்லிகாசுப்ராயன், துணைச் செயலாளா் ஆலம்தங்கராஜ், மாவட்ட எம்ஜிஆா் மன்றச் செயலாளா் கே.ஆா்.எல்.தங்கவேல், இளைஞரணி செயலாளா் தானேஷ் ஆகியோா் பேசினா். கூட்டத்தில் அதிமுகவினா் திரளாக பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com