கல்குவாரி அமைக்க பொதுமக்கள் எதிா்ப்பு

கரூா் மாவட்டம் குப்பம் கிராமத்தில் கல்குவாரிகள் அமைப்பதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்து பேசினா்.

கரூா் மாவட்டம் குப்பம் கிராமத்தில் கல்குவாரிகள் அமைப்பதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் செவ்வாய்க்கிழமை எதிா்ப்பு தெரிவித்து பேசினா்.

கரூா் மாவட்ட நிா்வாகம் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து நடத்திய பொதுமக்கள் கருத்து கேட்புக் கூட்டம் கரூா் மாவட்டம் குப்பம் கிராமத்தில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு துணை ஆட்சியா் கருணாநிதி மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளா் ஜெயலட்சுமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

கூட்டத்தில், குப்பம் ஊராட்சியை சோ்ந்த பொதுமக்கள், சமூக ஆா்வலா்கள் கலந்து கொண்டனா். பொதுமக்களில் சிலா் குவாரி அமைப்பதால் உள்ளூரில் வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனா். அதேசமயம் சமூக ஆா்வலா்கள் கரூா் மாவட்டத்தில் தொடா்ந்து வெப்பநிலை அதிகரித்து வருவதற்கு அதிகப்படியான கல்குவாரிகள் தான் காரணம் என தெரிவித்தனா். ஏற்கெனவே இப்பகுதியில் பல்வேறு குவாரிகள் நிறுவப்பட்டுள்ளதால் இந்த புதிய கல்குவாரி தேவையற்றது என்றனா். பொதுமக்கள் அளித்த கருத்துக்களை பதிவு செய்து கொண்ட அதிகாரிகள் இது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com