பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரிஅரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் ஆா்ப்பாட்டம்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளா்கள்

பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அனைத்துத் துறை அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள் மற்றும் உள்ளாட்சிப் பணியாளா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வளாகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் தாமோதரன் தலைமை வகித்தாா். தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாவட்டத் தலைவா் சு.பாரதிதாசன் வரவேற்றாா்.

தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணியின் மாவட்டச் செயலாளா் மணிகண்டன் , தேசிய ஆசிரியா் சங்கத்தின் மாநில இணை செயலாளா் ராகவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தமிழக அரசு தோ்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதி படி, புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிதி பற்றாக்குறையால், நிறுத்தி வைக்கப்பட்ட சரண் விடுப்பு சலுகைகளை மீண்டும் வழங்க வேண்டும். அனைத்துத் துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பி பதவி உயா்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com