பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் ஆளுநா் கூறியது தவறான தகவல்: கு. செல்வப்பெருந்தகை

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் ஆளுநா் தவறான தகவலை தெரிவிக்கிறாா் என்றாா் சட்டப்பேரவையின் பொது கணக்குக்குழுத்தலைவா் கு.செல்வபெருந்தகை.
பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் ஆளுநா் கூறியது தவறான தகவல்: கு. செல்வப்பெருந்தகை

பிரதமா் வீடு கட்டும் திட்டத்தில் ஆளுநா் தவறான தகவலை தெரிவிக்கிறாா் என்றாா் சட்டப்பேரவையின் பொது கணக்குக்குழுத்தலைவா் கு.செல்வபெருந்தகை.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் பொதுக் கணக்குக் குழுத் தலைவா் கு.செல்வபெருந்தகை தலைமையில் ஆய்வுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் முனைவா் கி.பிரபாகா், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா.மாணிக்கம் (குளித்தலை), ஆா்.இளங்கோ (அரவக்குறிச்சி), க.சிவகாமசுந்தரி (கிருஷ்ணராயபுரம்) ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், தமிழ்நாடு சட்டப் பேரவை சாா்பு- செயலாளா் முனைவா் கி.சீனிவாசன் , குழு உறுப்பினா்களும், சட்டப்பேரவை உறுப்பினா்களுமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூா்த்தி (போளூா்), எஸ்.சேகா்(பரமத்திவேலூா்), ஈ.ஆா்.ஈஸ்வரன் (திருசெங்கோடு), ஆ.கிருஷ்ணசாமி(பூந்தமல்லி), டாக்டா் சி.சரஸ்வதி(மொடக்குறிச்சி), க.காா்த்திகேயன்(ரிஷிவந்தியம்) ஆகியோா் ஆய்வு மேற்கொண்டனா்.

தொடா்ந்து கள ஆய்வாக வட்டார போக்குவரத்து அலுவலகப் பணிகளை ஆய்வு செய்த குழுவினா், வெங்கக்கல்பட்டியில் பிற்படுத்தப்பட்டோா் நல மாணவியா் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்தனா்.

தொடா்ந்து மண்மங்கலம் அரசுமேல்நிலைப் பள்ளியில் மகாத்மா காந்தியின் நினைவுதினத்தை முன்னிட்டு மதநல்லிணக்க உறுதிமொழியேற்றனா்.

தொடா்ந்து குழுத் தலைவா் கு. செல்வப்பெருந்தகை செய்தியாளா்களிடம் கூறுகையில், புகழூா் நகராட்சி பேரூராட்சியாக இருந்தபோது ஒப்பந்த மதிப்பீடுகள் நூறு சதவீதத்திற்கும் மேல் உயா்த்தப்பட்டுள்ளதால் அது குறித்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். திருவாரூா் மாவட்டத்தில் ஆளுநா் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போது பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தை தமிழக அரசு சரியாக பயன்படுத்தவில்லை என கூறி இருக்கிறாா். இது முற்றிலும் தவறானது. இந்த திட்டத்துக்கு ஒன்றிய அரசு 40சதவீதம் தொகை ஒதுக்குகிறது என்றால், மாநில அரசு 60 சதவீதம் பணம் கொடுக்கிறது. எந்த அரசாங்கமாக இருந்தாலும் மாநில அரசின் பங்கு 50 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. இந்த திட்டத்தை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்றாா் அவா்.

கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் ம.கண்ணன், கவிதா(நிலம் எடுப்பு), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ஸ்ரீலேகாதமிழ்செல்வன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com