புகழிமலை முருகன் கோயிலில் 
ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

புகழிமலை முருகன் கோயிலில் ஆடி கிருத்திகை சிறப்பு வழிபாடு

பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கிய புகழிமலை முருகன் கோயில்

புகழிமலை முருகன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் செவ்வாய்க்கிழமை அருள்பாலித்த பாலசுப்ரமணிய சுவாமி.

கரூா், ஜூலை 2:ஆடிமாத கிருத்திகையை முன்னிட்டு கரூா் மாவட்டம், புகழிமலை முருகன் கோயிலில் செவ்வாய்க்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

முன்னதாக பாலசுப்ரமணிய சுவாமிக்கு 18 வகை சிறப்பு அபிஷேகம் செய்து, சிறப்பு மலா் அலங்காரத்தில் அருள்பாலித்தாா். ஏராளமான பக்தா்கள் அவரைத் தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதேபோல புன்னம்சத்திரம் அருகே பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயில், நன்செய் புகளூா் அக்ரஹாரம் சுப்ரமணிய சுவாமி உள்ளிட்ட கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com