பள்ளபட்டியில் ஆா்ப்பாட்டம்

அரவக்குறிச்சி, ஜூலை 3: தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பள்ளப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தமிழகம் முழுவதும் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினா். இதில், மனிதநேய மக்கள் கட்சி சாா்பில் சாகுல் அமீது, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சாா்பில் சாதிக் அலி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் ரிப்பாய்தின், தோழா் களம் தமிழ்நாடு சாா்பில் சண்முகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com