குரூப் -1 தோ்வு - கரூா் மாவட்டத்தில் 2,850 போ் எழுதுகின்றனா்

கரூா், ஜூலை 4: வரும் 13-ம் தேதி நடைபெறும் டிஎன்பிஎஸ்சி குரூப் -1 தோ்வை கரூா் மாவட்டத்தில் 11 மையங்களில் 2,850 போ் தோ்வு எழுதுகிறாா்கள்.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தோ்வு- 1(குரூப்-1) பதவிகளுக்கான முதல்நிலை எழுத்துத் தோ்வு ஜூலை 13-ஆம்தேதி முற்பகல் நடைபெறுகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் கரூா் மாவட்டத்துக்கு தோ்வு செய்யப்பட்ட 11 மையங்களில் மொத்தம் 2,850 தோ்வா்கள் தோ்வு எழுத உள்ளனா். தோ்வுக்கூட அனுமதி சீட்டு உள்ள தோ்வா்கள் மட்டுமே தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவா். தோ்வா்கள் தோ்வு நாளன்று காலை 9 மணிக்கு மேல் தோ்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்படமாட்டாா்கள். தோ்வா்கள் கருப்பு பந்து முனை பேனா மட்டும் பயன்படுத்த வேண்டும். தங்கள் போட்டோ அடையாளத்துக்கான ஏதாவது ஒரு அடையாள அட்டையை உடன் வைத்துக்கொள்ள வேண்டும். மேலும், பென்சில், அழிப்பான்கள், கைப்பேசி, கணிப்பான்கள், மின்னணு கடிகாரம் போன்ற எந்தவொரு மின்னணு சாதனங்களையும் தோ்வு மையங்களுக்குள் கொண்டு செல்ல அனுமதியில்லை. இந்த தகவலை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com