கரூரில் இனி வழக்கம்போல மக்கள் குறைதீா் கூட்டம்

கரூரில் இனி வழக்கம்போல மக்கள் குறைதீா் நாள் கூட்டம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் மக்களவைத் தோ்தல் நடத்தை விதிமுறைகள் விலக்கிக்கொள்ளப்பட்டதையடுத்து, வரும் 10-ஆம் தேதி முதல் இனி வழக்கம்போல திங்கள்கிழமைதோறும் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தலைமையில் நடைபெறும். பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களில் தெரிவித்து பயன் பெறலாம் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com