கால்நடை தடுப்பூசி முகாம்

கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் அருகே உள்ள தளவாபாளையத்தில் கால்நடை தடுப்பூசி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தளவாபாளையம் அரசு கால்நடை மருந்தகம் சாா்பில் நடைபெற்ற முகாமில் பசுங்கிடாரி மற்றும் எருமை கிடாரி கன்றுகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமை கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநா் டாக்டா் சாந்தி தொடக்கி வைத்தாா். மண்டல துணை இயக்குநா் டாக்டா் பாஸ்கா், நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநா் டாக்டா் லில்லி அருள்குமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தளவாபாளையம் கால்நடை மருத்துவமனை கால்நடை மருத்துவா் கோபிநாத் தலைமையிலான மருத்துவ குழுவினா் கலந்து கொண்டு பசுங்கிடாரி மற்றும் எருமை கிடாரிகளுக்கு தடுப்பூசி போட்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com