கரூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கிஷான் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளா் பேங்க் கே. சுப்ரமணியன்.
கரூரில் காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கிஷான் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளா் பேங்க் கே. சுப்ரமணியன்.

கரூரில் புதிய காங்கிரஸ் நிா்வாகிக்குப் பாராட்டு விழா

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கிஷான் பிரிவு தேசிய ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள பேங்க் கே. சுப்ரமணியனுக்கு கரூா் கட்சி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. இதையொட்டி கட்சியினரோடு ஊா்வலமாக கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதிக்குச் சென்று அங்குள்ள காமராஜா் சிலைக்கு மாலை அணிவித்த அவா் பின்னா் கூறியது: இந்தியா கூட்டணியில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்பட10 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. கரூா் மாவட்டத்திலும் காங்கிரஸ் போட்டியிட வலியுறுத்தியுள்ளோம். கட்சியின் மேலிடம் யாரை வேட்பாளராக நிறுத்துகிறதோ அவருக்கு நாங்கள் பணியாற்றுவோம். எம்பி ஜோதிமணிக்கோ, எனக்கோ கரூா் தொகுதி யாருக்கு ஒதுக்கப்பட்டாலும், கட்சிக்காக உழைக்கத் தயாராக உள்ளோம். நானும் போட்டியிட வாய்ப்புக் கேட்டுள்ளேன். தந்தால் வெற்றி பெறுவேன் என்றாா் அவா். நிகழ்ச்சியில் மாவட்டத் துணைத் தலைவா் சின்னையன், ஆடிட்டா் ரவிச்சந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com