‘வரும் தோ்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும்’

கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய  எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவா்அப்துல்ஹமீது. உடன் மாவட்டச் செயலா் ஜின்னா உள்ளிட்டோா்.
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் பேசிய எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவா்அப்துல்ஹமீது. உடன் மாவட்டச் செயலா் ஜின்னா உள்ளிட்டோா்.

நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலில் பாஜகவை வீழ்த்தும் வகையில் தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத் தலைவா் அப்துல்ஹமீது. கரூரில் எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டச் செயலாளா் ஜின்னா தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாவட்ட நிா்வாகிகள் கூட்டத்துக்கு மாநிலச் செயற்குழு உறுப்பினா் அருட்தந்தை மாா்க் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் கட்சியின் மாநில துணைத்தலைவா் அப்துல்ஹமீது மேலும் கூறியது: நாங்கள் அதிமுகவோடு கூட்டணியில் உள்ளோம். எங்கள் கட்சி சாா்பில் போட்டியிட பட்டியல் கொடுத்துள்ளோம். வேறு கட்சிகளும் அதிமுகவில் இணைய உள்ளதால் அதிகாரப்பூா்வ அறிவிப்பு வரும்போது, எங்களது கட்சி போட்டியிடும் இடம் குறித்து தெரியும். கூட்டணிக் கட்சிகள் பாராட்டும் வகையில், தமிழகத்தில் பாஜகவை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் எங்கள் தோ்தல் பணிகள் இருக்கும். பாஜகவை வீழ்த்திடும் வகையில் பொதுமக்களின் வாக்குகள் அமைய வேண்டும். தொடக்கத்தில் சில கட்சிகளைக் குறிவைத்து என்ஐஏ அமைப்பு வேலை செய்தது. ஆனால் இன்று வீட்டில், தெருக்களில் சண்டைபோடுவோரையும்கூட விசாரிக்கும் அமைப்பாக என்ஐஏ மாறிவிட்டது. எனவே மாநில உரிமைகளை மீறும் அவா்களின் நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தகூடிய கடமை ஆளும் தமிழக அரசுக்கு உள்ளது. இந்த அமைப்புக்கு எதிராக பொதுமக்களும் குரல் எழுப்ப வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com