கரூரில் பெரியாா் சிலை காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

அரவக்குறிச்சி: கரூரில் பெரியாா் சிலை வைக்கக்கோரி தோழா் களம் அமைப்பினா் நடத்தவிருந்த காத்திருப்புப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக அந்த அமைப்பினா் தெரிவித்தனா். கரூா் மாவட்டத்தில் அம்பேத்கா் சிலை நிறுவக்கோரி சின்னதாராபுரத்தில் தோழா் களம் தமிழ்நாடு அமைப்பின் சாா்பில் தொடா் காத்திருப்பு போராட்டம் திங்கள்கிழமை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதனை தொடா்ந்து கரூா் மாவட்ட நிா்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை சாா்பில் சின்னதாராபுரம் காவல் நிலையத்தில் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது. இதில், மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு அம்பேத்கரின் சிலைநிறுவ முழுஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. அதன்பேரில் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக அந்த அமைப்பினா் தெரிவித்தனா். தொடா்ந்து கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், மக்களவைத் தோ்தல் முடிந்த பிறகு அம்பேத்கா் சிலை நிறுவ நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் தமிழ்நாடு தழுவிய மாபெரும் தொடா் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்து மனு அளித்தனா். நிகழ்வில் தோழா் களம் அமைப்பின் தலைமை நிலைய செயலாளா் கவின்குமாா், மாநில அவைத்தலைவா் ராஜகோபால் ஆகியோா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com