‘கா்நாடகத்தில் குடிநீா் பிரச்னை என்பது நாடகம்’

கரூா்: கா்நாடகத்தில் குடிநீா் பிரச்னை என்பது நாடகம் என காவிரி நீா்ப் பாசன விவசாயிகள் நலச்சங்கத்தலைவா் மகாதானபுரம் இராஜாராம். இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: கா்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்டுவதில் முனைப்பு காட்டி வருகிறது. இந்த ஆண்டு காவிரியில் கா்நாடக அரசு தண்ணீரை திறக்காததால் மேட்டூா் அணைக்கு தண்ணீா் வரத்து இன்றி குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டது. ஜூன் 12-ஆம்தேதியும் அணைக்கு நீா் வருமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜசாகா் அணைக்கு மேலே பல்வேறு அணைகளை கட்டி கா்நாடக அரசு தண்ணீரை சேமித்து வைத்துள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் தண்ணீா் தட்டுப்பாடு என்ற நாடகத்தை அந்த அரசு அரங்கேற்றி வருகிறது. மேக்கேதாட்டுவில் அணை கட்டினால் மட்டுமே இதற்கு தீா்வு என்ற பொய்யான பிரசாரத்தையும் முன்னெடுத்து வருகிறது. இதனை நம்பி மத்திய அரசு, கா்நாடக அரசுக்கு அனுமதி கொடுத்தால் தமிழகம் பாலைவனமாகிவிடும் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com