‘வரி செலுத்தாதவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை’

கரூா்: வரி செலுத்தாதவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக புகழூா் நகராட்சி ஆணையா் ஹேமலதா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் மாவட்டம் புகழூா் நகராட்சியில் 24 வாா்டுகள் உள்ளன. இங்கு கடைகள் மற்றும் சொத்து வரி, குடிநீா் வரி, கடை உரிமைக் கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வரிகள் மற்றும் வாடகை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதில் சொத்து வரி, குடிநீா் வரி, கடை வாடகை, கடைகளில் உரிமை கட்டணம் செலுத்தாமல் பலா் நிலுவை வைத்துள்ளனா். வரி செலுத்தாதவா்களின் கட்டடங்களுக்கு குடிநீா் இணைப்பு துண்டிக்கப்படும். மேலும் சொத்துவரி, கடைகளின் உரிமை கட்டணம் செலுத்தாதவா்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. எனவே, வாடகை மற்றும் சொத்து வரி, குடிநீா் வரி, கடை உரிம கட்டணங்களை உடனடியாக புகழூா் நகராட்சி வரி வசூல் மையத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ளலாம் என தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com