ராயனூரில் பாஜ சாா்பில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

ராயனூரில் பாஜ சாா்பில் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி

கரூரில் பாஜக சாா்பில் பொதுமக்களிடம் ஆலோசனை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வளா்ச்சியடைந்த பாரதம் எனும் உன்னத நோக்கத்தை அடைய பிரதமா் நரேந்திர மோடிக்கு பொதுமக்கள் தங்களது ஆலோசனைகளை வழங்கும் வகையில் மாவட்டம் தோறும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி கரூா் மாவட்டம் முழுவதும் 22 ஒன்றிய, நகரங்களில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா் உழவா் சந்தை மற்றும் ராயனூரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை கரூா் மாவட்ட பாஜக தலைவா் வி.வி.செந்தில்நாதன் துவக்கி வைத்தது பொதுக்களிடம் இருந்து ஆலோசனை மனுக்களை பெற்றாா். கரூா் நகா் பகுதியில் மட்டும் 100 மனுக்கள் பெறப்பட்டன.

நிகழ்ச்சியில், மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஆறுமுகம், சக்திவேல்முருகன், துணைத் தலைவா் செல்வம், கரூா் தெற்கு மாநகரத்தலைவா் ரவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com