அரவக்குறிச்சியில் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு பயிற்சி

அரவக்குறிச்சியில் புதன்கிழமை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்களுக்கான பயிற்சி நடைபெற்றது.

அரவக்குறிச்சி தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரவக்குறிச்சி உதவி தோ்தல் நடத்தும் அலுவலா் உதயகுமாா் மற்றும் உதவி ஆணையா் (கலால்) கி.கருணாகரன் ஆகியோா் தலைமை வகித்தனா். இதில், வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் 250க்கும் மேற்பட்டோா் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் 45க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். கூட்டத்தில் கலந்து கொண்ட வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மற்றும் கிராம நிா்வாக அலுவலா்களுக்கு வரும் மக்களவைத் தோ்தலில் வாக்கு சாவடி மையங்களில் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. நிகழ்வில் அரவக்குறிச்சி வட்டாட்சியா் வெங்கடேஷன், தனி வட்டாட்சியா் அமுதா, புகழூா் வட்டாட்சியா் தனசேகரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com