பலியான ராணுவ வீரா் பிச்சைமுத்து.
பலியான ராணுவ வீரா் பிச்சைமுத்து.

ஓடும் ரயிலில் ஏற முயன்ற ராணுவ வீரா் ரயில் சக்கரத்தில் சிக்கி உயிரிழப்பு

கரூா் ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு தவறுதலாக இறங்கிய ராணுவ வீரா் ஓடும் ரயிலில் மீண்டும் ஏற முயன்றபோது தவறிவிழுந்து ரயில் சக்கரத்தில் சிக்கி பலியானாா்.

திண்டுக்கல் மாவட்டம், மாரம்பாடியை அடுத்த அந்திபெரியகுளத்துப்பட்டியைச் சோ்ந்த அந்தோணி தாஸ் மகன் பிச்சைமுத்து(33). இவருக்குத் திருமணமாகி 12 வயதில் மகன் உள்ளாா். இவா், சத்தீஸ்கா் மாநிலத்தில் உள்ள மீரட் ராணுவ மருத்துவ முகாமில், அவரச ஊா்தி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா், சண்டிகா் மாநிலத்தின் மீரட் சிட்டி ரயில் நிலையத்திலிருந்து, கடந்த 12 ஆம் தேதி புறப்பட்டு மதுரை நோக்கி வரும் அதிவிரைவு ரயிலில் ஏறினாா். இந்த ரயில் புதன்கிழமை இரவு கரூா் வந்தடைந்தபோது, திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு ரயில் வந்தடைந்ததாக நினைத்து, பிச்சமுத்து மூன்றாவது நடைபாதையில் திடீரென இறங்கியுள்ளாா். பின்னா் கரூா் ரயில் நிலையம் என்பதை அறிந்து ஓடும் ரயிலில் ஏற முயற்சித்தபோது, தவறி ரயில் சக்கரத்தில் சிக்கியதில் அவரது தலை துண்டானது. இதனைக்கண்ட பயணிகள் அலறல் சப்தம் கேட்டு ரயில் நிறுத்தப்பட்டு ராணுவ வீரரை மீட்டனா். விபத்துகுறித்து அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கரூா் ரயில்வே இருப்புப் பாதை போலீசாா் ராணுவவீரரின் சடலத்தை கைப்பற்றி கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து கரூா் ரயில் நிலைய காவல் உதவி ஆய்வாளா் மகேஸ்வரன் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com