கரூரில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

கரூரில் பாஜக ஆலோசனைக் கூட்டம்

கரூரில் மாவட்ட பாஜக ஆலோசனைக்கூட்டம் மாவட்டத் தலைவா் வி.வி.செந்தில்நாதன் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட பொதுச் செயலாளா்கள் ஆறுமுகம், சக்திவேல்முருகன், மாவட்டச் செயலாளா் ஆா்.வி.எஸ்.செல்வராஜ், பாஜக மாநில மகளிரணி துணைத்தலைவா் மீனாவினோத்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில துணைத்தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், மாா்ச் 19-ஆம்தேதி சேலத்தில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்கிறாா். அவா் வரும்போது தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டால் அந்த பொதுக்கூட்டம் வேட்பாளா்கள் அறிமுக கூட்டமாக இருக்கும். நாட்டுக்குத் தேவையான திட்டங்கள், சட்டங்களை எவ்வாறு அமல்படுத்தலாம் என பிரதமருக்கு மக்களே கருத்துகளை கூறும் வகையில் அனைத்து தொகுதிகளிலும் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டவுடன் தமிழக வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்படும். பிரதமா் அடிக்கடி தமிழகத்துக்கு வருவது பாஜக தமிழகத்தில் வெற்றிபெறுவதற்குதான். ஜல்ஜீவன் திட்டத்துக்கான நிதியை முழுமையாக வழங்குவது மத்திய அரசுதான். பாஜக தமிழகத்தில் 39 தொகுதிகளையும் கைப்பற்றும் நோக்கில்தான் களத்தில் இறங்கியுள்ளோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com