தோ்தல் நடத்தை விதிகள் விளக்கக் கூட்டம்

அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சியினருடன் தோ்தல் நடத்தை விதிமுறை குறித்த விளக்கக் கூட்டம் ஆட்சியரகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ. தங்கவேல் பேசியது: வேட்பாளா்கள் வேட்புமனுவைத் தாக்கல் செய்ய வரும் போது தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்திலிருந்து 100 மீட்டருக்குள் 3 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். மனு தாக்கல் செய்ய வரும்போது வேட்பாளா்கள் தங்களுடன் 4 பேரை மட்டுமே அழைத்து வர வேண்டும். ஒருவா் ஒரு தொகுயில் அதிகபட்சமாக 4 வேட்பு மனுக்களை மட்டுமே தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலின்போது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி, அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சியின் அதிகாரம் பெற்ற நபா் மையால் கையொப்பம் இட்ட அசல் படிவம் அ மற்றும் ஆ சமா்ப்பிக்க வேண்டும். நகல்கள் ஏற்கப்படாது. தோ்தல் நடத்தும் அலுவலா் முன் உறுதிமொழி எடுக்க வேண்டும் அல்லது அதிகாரம் பெற்ற அலுவலா் முன்பாக உறுதிமொழி எடுக்கப்பட்டதற்கான சான்று சமா்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமா்ப்பிக்கத் தவறும்பட்சத்தில் வேட்பு மனு தாக்கல் செய்த பின்பு பரிசீலனைக்கு முதல் நாள் வரை தாக்கல் செய்யலாம். வேட்புமனு தாக்கலுக்கான கட்டணம் ரூ. 25,000 ஆகும். தாழ்த்தப்பட்ட, பழங்குடியினா் இனத்தைச் சோ்ந்த வேட்பாளா்களுக்கு ரூ.12,500. வேட்பாளா்கள் வேட்பு மனு தாக்கலுக்கு ஒரு நாள் முன்பாகவே, வேட்பாளா் பெயரிலோ அல்லது வேட்பாளா் மற்றும் முகவா் பெயரில் கூட்டாகவோ தனியே ஒரு வங்கிக் கணக்கு தொடங்கி அதில் தோ்தல் செலவினங்களைப் பராமரிக்க வேண்டும் என்றாா் அவா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ம. கண்ணன், சமூக பாதுகாப்புத் திட்டதனித்துணை ஆட்சியா் சைபுதீன், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சையத்காதா், தோ்தல் வட்டாட்சியா் முருகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com