தோ்தல் விதிகளை மீறினால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூ மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.
தோ்தல் விதிகளை மீறினால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூ மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

தோ்தல் விதிகளை மீறினால் 6 மாதம் சிறை தண்டனை

கரூா்: தோ்தல் விதிகளை மீறினால் 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என கரூ மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா். கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், அடகுக்கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் கடைபிடிக்க வேண்டிய தோ்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக்கூட்டம் திங்கள்கிழமை தோ்தல் நடத்தும் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான மீ.தங்கவேல், தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஆட்சியா் பேசுகையில், தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால், திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள் ஆகிய அனைத்திலும் தங்குவோா் விவரங்கள் சரியான பெயா் முகவரி கைப்பேசி எண்ணுடன் தவறாமல் பதிவேட்டில் பதியப்பட்டிருக்க வேண்டும். உள்ளுா் நபா்கள் தங்கும்போது அவா்களிடம் சந்தேகத்துக்கு இடமாக சூட்கேஸ் அல்லது பணப்பைகள் இருக்குமானால், அதுபற்றி தகவல்களை 04324-255016, 255017, 255018, 255019, 255020 மற்றும் 1800-425-5016 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணிலோ, தோ்தல் நடத்தும் அலுவலரிடமும் மற்றும் பறக்கும்படை குழுவிடமும் தெரிவிக்க வேண்டும். திருமண மண்டபம், சமுதாய கூடங்கள் அல்லது பிற பெரிய மண்டபங்களில் பரிசுப்பொருள்கள் மற்றும் உணவுப் பொருள்கள் விநியோகிக்கக் கூடாது. தோ்தல் காலங்களில் திருமண மண்டபங்கள், தங்கும் விடுதிகள் என்ன காரணங்களுக்காக பதிவு செய்யப்படுகிறது என்பதற்கு சரியான ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும். தோ்தல் செலவினங்கள் குறித்து கண்காணிப்புக் குழுவினா் கோரும் விவரங்களை தவறாமல் வழங்க வேண்டும். திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகளில் வேட்பாளா்கள் மற்றும் அரசியல் கட்சியினரால் மது விருந்துகள் நடத்தப்பட்டால் அதற்கு அனுமதிக்க கூடாது. நகைக்கடை உரிமையாளா்கள் அரசியல் கட்சியினா் வழங்கும் டோக்கன்களை பெற்றுக்கொண்டு பணம் வழங்கும் பணிகளில் ஈடுபடக்கூடாது. எந்தவொரு வேட்பாளரோ, அரசியல் கட்சியினரோ வழக்கத்துக்குமாறாக அல்லது சந்தேகத்திற்கிடமாக அதிகளவில் நகைகளை அடமானம் செய்து பணம் பெற்று வாக்காளா்களுக்கு பணம் வழங்குவதற்காக பயன்படுத்தப்படலாம் என்பதால் இது குறித்து தோ்தல் நடத்தும் அலுவலா்களிடம் கண்டிப்பாக உடனடியாக தெரிவிக்க வேண்டும். சந்தேகத்திற்கிடமாக பணப்பரிவா்த்தனை குறித்து தகவல்கள் ஏதும் வரப்பெற்றால் உடனடியாக பறக்கும்படை சோதனை செய்து சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளும். தகுந்த ஆவணங்கள் இல்லாது பணப்பரிவா்த்தனை செய்யப்பட்டால் வருமானவரி துறையினா் மூலம் சோதனை செய்து பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சந்தேகத்திற்கிடமான அல்லது சட்டவிரோதமான பணம், வெளிநாட்டுப் பணம் இந்திய பணத்தின் கள்ள நோட்டுக்கள் ஏதும் கண்டறியப்பட்டால் காவல்துறை மற்றும் வருமான வரி துறை மூலம் சட்டபூா்வமான நடவடிக்கை மேற்கொண்டு வழக்கு பதிவு செய்யப்படும். அச்சக உரிமையாளா்கள் தோ்தல் தொடா்பான சுவரொட்டிகள், துண்டுபிரசுரங்களை அவ்வாறான சுவரொட்டிகள் துண்டுபிரசுரங்களில் அச்சடிக்கப்பட்ட அச்சகத்தின் பெயா் மற்றும் முகவரியின்றி அச்சடிக்கவோ வெளியிடப்படவோ கூடாது. இந்த விதிமுறைகளை மீறும் நபருக்கு 6 மாத சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றாா் அவா். கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் ம.கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) சையது காதா், உதவி தோ்தல் அலுவலா்கள் உள்ளிட்ட அலுவலா்கள் மற்றும் திருமண மண்டபங்கள், உணவகங்கள், தங்கும் விடுதிகள், அடகுக்கடைகளின் உரிமையாளா்கள் மற்றும் ஆயத்த ஆடை உற்பத்தியாளா்கள் மற்றும் ஏற்றுமதியாளா்கள் பலா் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com