அரவக்குறிச்சி அருகே பணம் வைத்து சூதாடிய மூன்று போ் கைது

ரூ.5900 பறிமுதல் அரவக்குறிச்சி போலீசாா் விசாரணை. அரவக்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பூா் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அரவக்குறிச்சி: ரூ.5900 பறிமுதல் அரவக்குறிச்சி போலீசாா் விசாரணை. அரவக்குறிச்சி அருகே உள்ள புத்தாம்பூா் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக அரவக்குறிச்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை புத்தாம்பூா் அருகே உள்ள வடுகப்பட்டி பகுதியில் அரவக்குறிச்சி போலீசாா் ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அங்கு செல்வம் என்பவரது தோட்டத்தில் பணம் வைத்து சூதாடுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட வடுகப்பட்டி பகுதியைச் சோ்ந்த செல்வராஜ், பாகநத்தம் பகுதியைச் சோ்ந்த செல்வராஜ், ரங்கபாளையம் பகுதியைச் சோ்ந்த பிரபு ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் சூதாட பயன்படுத்திய ரூ.5900 பறிமுதல் செய்தனா். இதுகுறித்து அரவக்குறிச்சி போலீசாா் மூவா் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com