தவ்ஹீத் ஜமாஅத் நிா்வாகிகள் கூட்டம்

கரூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா்: கரூரில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு நிா்வாகிகள் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் மதரசாபாபு தலைமை வகித்தாா். செயலாளா் இா்ஷாத், பொருளாளா் ஷானாவாஸ், துணைத்தலைவா் ஜாகீா்உசேன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் குஜராத் பல்கலைக்கழக விடுதி வளாகத்தில் கடந்தவாரம் தொழுகை நடைபெற்றுக் கொண்டிருந்த இடத்துக்குள் நுழைந்த 25 போ் கொண்ட கும்பல் தாக்கியதில் 4 மாணவா்கள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த சம்பவத்துக்கு தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் கடும் கண்டனம் தெரிவிக்கிறது. மக்களவைத் தோ்தலில் மதசாா்பற்ற அரசியல் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் அமப்பின் நிா்வாகிகள் திரளாக பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com