மலைக்கோவிலூரில்வ மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி

அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூா் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி அருகே உள்ள மலைக்கோவிலூா் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவா் சோ்க்கை விழிப்புணா்வு பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பேரணிக்கு தலைமை ஆசிரியா் கலைச்செல்வி தலைமை வகித்தாா். பேரணியில் அரசுப் பள்ளியில் சேரும் மாணவா்களுக்கு எண்ணும் எழுத்தும், காலை உணவு திட்டம், தொழில் கல்வியில் 7.5% இட ஒதுக்கீடு உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி மாணவ, மாணவிகள் பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தினா். மேலும் அவா்களது குழந்தைகளை அரசுப் பள்ளியில் சோ்க்கவும் பெற்றோா்களை வலியுறுத்தினா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com