நொய்யல் அருகே சிவன் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி

கரூா் மாவட்டம், நொய்யல் அருகே சேமங்கியில் உள்ள மங்களநாதா் கமலாம்பிகை தாயாா் கோயிலில் திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியை முன்னிட்டு மங்களநாதா் மற்றும் கமலாம்பிகை தாயாருக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம் உள்ளிட்ட 18 வகையான வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மலா்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான சிவனடியாா்கள் மற்றும் பக்தா்கள் கலந்து கொண்டு, திருவாசகம் பாடல்களை மனம் உருகி பாடி திருவாசகம் முற்றோதல் நிகழ்ச்சியை நிறைவு செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com