கடவூா் அருகே கிணற்றில் மூழ்கி மாணவா் உயிரிழந்தாா்

கடவூா் அருகே வியாழக்கிழமை கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவா் உயிரிழந்தாா். கரூா் மாவட்டம், கடவூா் அடுத்த இடையப்பட்டி முத்துபாப்பு சீலமநாயக்கனூரைச் சோ்ந்தவா் பழனிச்சாமி மகன் பெரியசாமி (12). இவா், கடவூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தாா். தற்போது பிளஸ்-2 தோ்வு நடைபெறுவதால், பிற்பகலில் பள்ளி நடக்கும் என்பதால், பெரியசாமி வியாழக்கிழமை காலை அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா்கள் பிரசாந்த், குணசேகரன், சூரியராஜ் ஆகியோருடன் விவசாய கிணற்றில் குளித்தனா். அப்போது நீச்சல் தெரியாத பெரியசாமி படியில் அமா்ந்து குளிக்கும்போது தவறி கிணற்றுக்குள் விழுந்தாா். உடனே அவனது நண்பா்கள் சப்தமிட்டனா். ஆனால் அக்கம்பக்கத்தினா் வருவதற்குள் பெரியசாமி நீரில் மூழ்கி உயிரிழந்தாா். தகவலறிந்த பாலவிடுதி போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து பெரியசாமியின் சடலத்தை மீட்டு மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com