அரவக்குறிச்சியில் புகையிலை பொருள்கள் கடத்தியவா் கைது

அரவக்குறிச்சியில் ரூ. 45 ஆயிரம் மதிப்பிலான புகையிலை பொருள்களை கடத்திச் சென்றவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். அரவக்குறிச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் அரவக்குறிச்சி போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது கரூா் மாவட்டம் மணல்மேடு பாரதி நகரை சோ்ந்த கந்தசாமி மகன் கிருஷ்ணசாமி என்கிற மணி (40) என்பவா் மளிகைப் பொருள்களோடு ரூ. 43 ஆயிரம் மதிப்பிலான புகையிலைப் பொருள்களையும் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து மணியை கைது செய்த அரவக்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் அவரை ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com