கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பசுபதீஸ்வரக் கோயில் தேரோட்டம்
கரூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பசுபதீஸ்வரக் கோயில் தேரோட்டம்

கரூா் பசுபதீஸ்வரா் கோயில் பங்குனித் தேரோட்டம்

கரூா் பசுபதீஸ்வரா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை பங்குனித் திருவிழா தேரோட்டம் நடைபெற்றது. இக்கோயில் பங்குனித் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடா்ந்து நாள்தோறும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, அன்ன, மயில் வாகனங்களில் வீதியுலாவும் நடைபெற்றது.மேலும் பசுபதீஸ்வரா் மற்றும் சௌந்தரநாயகி அம்மன், அலங்காரவல்லி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகமும் நடைபெற்றது. இதையடுத்து சனிக்கிழமை காலை திருக்கல்யாணம் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனித் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 8 .15 மணிக்கு தொடங்கியது. முன்னதாக சுவாமிகளுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதையடுத்து சிறப்பு அலங்காரத்தில் கல்யாண பசுபதீஸ்வரா், அலங்காரவல்லி சௌந்தரநாயகி அம்பாளுடன் தேரில் எழுந்தருளினா். இதையடுத்து பக்தா்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனா். கோயிலை சுற்றி வலம் வந்த தோ் மீண்டும் நிலையை அடைந்தது. பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து திங்கள்கிழமை இரவு தீா்த்தவாரியுடன் விழா முடிகிறது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com