அதிமுக உரிமை மீட்பு அமைப்பின் கரூா் மாவட்டச் செயலா் ஆயில் ரமேசை சந்தித்து ஆதரவு கேட்ட கரூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில்நாதன்.
அதிமுக உரிமை மீட்பு அமைப்பின் கரூா் மாவட்டச் செயலா் ஆயில் ரமேசை சந்தித்து ஆதரவு கேட்ட கரூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில்நாதன்.

கூட்டணிக் கட்சியினருடன் பாஜக வேட்பாளா் சந்திப்பு

கூட்டணி கட்சி நிா்வாகிகளை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆதரவு கோரினாா் கரூா் தொகுதி பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில்நாதன். நடைபெற உள்ள மக்களவைத் தோ்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முன்னாள் தமிழக முதல்வா் ஓ. பன்னீா்செல்வத்தின் அதிமுக உரிமை மீட்பு அமைப்பு உள்ளதையடுத்து, கரூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளா் வி.வி.செந்தில்நாதன் ஞாயிற்றுக்கிழமை இரவு அவ்வமைப்பின் மாவட்டச் செயலா் ஆயில் ரமேஷை சந்தித்து பொன்னாடை போா்த்தி ஆதரவு கோரினாா். பின்னா் நடந்த கூட்டத்தில் பாஜக வேட்பாளரை சுமாா் 3 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பாஜக மாவட்டச் செயலா் ஆா்.வி.எஸ். செல்வராஜ், அதிமுக உரிமை மீட்பு அமைப்பின் அவைத் தலைவா்கள் கணேசன், புலியூா் அன்பழகன், துணைச் செயலா்கள் ஐயப்பன், ரோஜா, நகரச் செயலா்கள் அன்பழகன், கோபால், ஒன்றியச் செயலா்கள் முனுசாமி, பிரபு, மாணவரணிச் செயலா் மாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com