தமிழ்நாடு தவ்ஹீத்ஜமா அத் நிா்வாகிகள் ஆலோசனை

கரூரில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பின் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவா் ஜாகீா்உசேன் தலைமை வகித்தாா். மாவட்ட துணைச் செயலா் சிராஜூதீன், பொருளாளா் ஷானாவாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் மதரசாபாபு, செயலா் இா்ஷாத் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கினா். கூட்டத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு வரும் ஏப்.10,11,12-ஆம் தேதிகளில் அரசு பொதுத்தோ்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதில் ஏப்.10, 11-ஆம் தேதிகளில் ஒருநாள் ரமலான் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால், அப்போது தோ்வு நடைபெற்றால் இஸ்லாமிய மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாவா். எனவே அந்த தோ்வை மாற்றுத் தேதியில் அறிவிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்வது என்பன உள்ளிட்டதீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் தமிழ்நாடு தவ்ஹீத்ஜமாஅத் அமைப்பினா் திரளாக பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com