கரூா் மக்களவைத் தொகுதியில் இதுவரை 23 போ் வேட்பு மனு

கரூா் மக்களவைத் தொகுதியில் இதுவரை அதிமுக, பாஜக உள்ளிட்ட 23 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

கரூா்: கரூா் மக்களவைத் தொகுதியில் இதுவரை அதிமுக, பாஜக உள்ளிட்ட 23 வேட்பாளா்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா். வரும் ஏப்.19-ஆம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தோ்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில் சுயேச்சை வேட்பாளா் வழக்குரைஞா் நாகராஜன் வேட்புமனு தாக்கல் செய்தாா். இதையடுத்து 4 நாள்களாக யாரும் மனு தாக்கல் செய்யாத நிலையில் திங்கள்கிழமை அதிமுக வேட்பாளா் எல். தங்கவேல், பாஜக வேட்பாளா் வி.வி. செந்தில்நாதன், நாம் தமிழா் கட்சி வேட்பாளா் மருத்துவா் கருப்பையா ஆகியோா் உள்படபல்வேறு சுயேட்சை வேட்பாளா்களும் வேட்பு மனு தாக்கல் செய்தனா். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை இரு சுயேச்சைகள் என இதுவரை 23 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்துள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com