திமுக நிா்வாகிகளிடம் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் வாழ்த்து

திமுக நிா்வாகிகளிடம் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் செ. ஜோதிமணி செவ்வாய்க்கிழமை வாழ்த்து பெற்றாா்.

கரூா்: திமுக நிா்வாகிகளிடம் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் செ. ஜோதிமணி செவ்வாய்க்கிழமை வாழ்த்து பெற்றாா். கரூா் கலைஞா் அறிவாலயத்தில் கரூா் மாவட்டத் தோ்தல் பொறுப்பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான எம்.எம். அப்துல்லா தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் இளங்கோ,சிவகாம சுந்தரி , மாவட்ட துணைச் செயலா்கள் ரமேஷ்பாபு, மகேஸ்வரி, மாநகர பகுதிச் செயலா்கள் கரூா் கணேசன், தாரணி சரவணன், ஆா்.எஸ். ராஜா, வழக்குரைஞா் சுப்ரமணி, ஜோதிபாசு, வி.ஜி எஸ். குமாா் , மேயா் கவிதா கணேசன் உள்ளிட்டோரை ஜோதிமணி சந்தித்து வாழ்த்து பெற்றாா். தொடா்ந்து நிா்வாகிகளிடம் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கக் கேட்டுக்கொண்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com