கள்ளை காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.
கள்ளை காளியம்மன் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தேரோட்டம்.

தோகைமலை அருகே பங்குனித் தேரோட்டம்

கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கள்ளை காளியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கரூா்: கரூா் மாவட்டம், தோகைமலை அருகே கள்ளை காளியம்மன் கோயில் தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. பக்தா்கள் திரளாக பங்கேற்றனா். தோகைமலை ஒன்றியம் கள்ளை ஊராட்சியில் உள்ள கள்ளை, மணியகவுண்டன்பட்டி, கொக்கக்கவுண்டம்பட்டி, சின்னகவுண்டம்பட்டி, பூவாயிபட்டி உள்ளிட்ட8 ஊா்களுக்குச் சொந்தமான காளியம்மன், பகவதியம்மன், கருப்பசாமி கோயில் பங்குனித் தேரோட்ட விழா காளியம்மனுக்கு பூப்போடுதல், கரகம் பாலித்தல் நிகழ்ச்சியுடன் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடா்ந்து திங்கள்கிழமை கருப்பசாமி குட்டி குடித்தல், தேவராட்டம், கரகாட்டம், மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. முன்னதாக காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் தேரில் காளியம்மன் எழுந்தருளினாா். இதையடுத்து தேரோட்டம் நடைபெற்றது. பக்தா்கள் திரளாக பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். கோயில் முன் தொடங்கிய தேரோட்டம், மீண்டும் நிலையை அடைந்தது. பின்னா் அங்கு நோ்த்திக் கடனுக்காக இருந்த எருமை கிடாக்களை வெட்டி வழிபாடு செய்தனா். பின்னா் மாலையில் மஞ்சள் நீராடுதல், காளியம்மன் கரகம் எடுத்து விடுதல் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் கரூா், திருச்சி, தஞ்சாவூா், திண்டுக்கல், நாமக்கல் உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com