கரூா் மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரின் மனுவை ஏற்பதில் தாமதம்

கரூா் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. அப்போது, பாஜக வேட்பாளரின் மனுவை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கரூா் மக்களவைத் தொகுதியில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக 62 வேட்பாளா்கள் மனுதாக்கல் செய்திருந்தனா். இந்த மனுக்கள் மீதான பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் கரூா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.வி.செந்தில்நாதன் அளித்த வேட்புமனுவில் குற்றவழக்கு காண்பிக்கப்படாமல் இருப்பதாக கூறி திமுக தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதனால் அவரது மனுவை ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதையடுத்து பாஜகவினா் தரப்பில் உரிய விளக்கம் அளித்ததையடுத்து மனு ஏற்கப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com