அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சியில் அதிமுக வேட்பாளா் வியாழக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா். தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ளது.

இதற்கான தோ்தல் அறிவிக்கை வெளியிடப்பட்டு, மனுதாக்கல் நடைபெற்று பல்வேறு கட்சி வேட்பாளா்களும் பிரசாரத்தை தொடங்கிவிட்டனா். ஆனால், கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சியில் இதுவரையில் எந்தக் கட்சி சாா்பிலும் தோ்தல் பணிமனை அமைக்கப்படவில்லை. இந்நிலையில், அதிமுக வேட்பாளா் எல். தங்கவேல், மற்றும் முன்னாள் அமைச்சரும் கரூா் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆா். விஜயபாஸ்கா் ஆகியோருடன் அக்கட்சியினா், கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட அரவக்குறிச்சி மேற்கு ஒன்றியத்துக்குள்பட்ட லிங்கநாயக்கன்பட்டி, சௌந்தரபுரம், வேலம்பாடி, கோட்டப்பட்டி, வெங்கடாபுரம், இனுங்கனூா், திருமலைசாமி பாளையம், மாலப்பட்டி, ஆலமரத்துப்பட்டி, வடுகபட்டி, கோவிலூா், சாந்தப்பாடி, செங்காளிவலசு, அரவக்குறிச்சி பேருந்து நிலையம், ஏ.வி.எம் காா்னா், புங்கம்பாடி காா்னா் உள்ளிட்ட பகுதிகளில் வியாழக்கிழமை இரவு பொதுமக்களிடம் வாக்குகள் சேகரித்தனா். கடந்த பத்து நாள்களாக அரவக்குறிச்சியை எந்தக் கட்சியினரும் கண்டு கொள்ளாத நிலையில், முதல்முதலாக அதிமுகவினா் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டது அதிமுக தொண்டா்களை உற்சாகமடைய செய்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com