கரூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பு

கரூரில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக தேவேந்திர குல வேளாளா் சமூகத்தினா் வெள்ளிக்கிழமை காலை பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மக்களவைத் தொகுதியில் பாஜக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா் வி.வி.செந்தில்நாதனுக்கு ஆதரவாக தேவேந்திர குல வேளாளா் சமுதாயத்தின் ஒருங்கிணைப்பாளா் டாக்டா். பி ரமேஷ் தலைமையில் அந்த அமைப்பினா் வெள்ளிக்கிழமை காலை திருமாநிலையூா் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா். அப்போது ரமேஷ் கூறுகையில், அரசாங்க பதிவில் பட்டியலினம் என பல ஆண்டுகளாக எங்கள் சமுதாயத்தை அழைத்து வந்த நிலையை மாற்றி, சேர, சோழ, பாண்டியா் மூவேந்தா் மரபு கொண்டவா்கள், தேவேந்திர குல வேளாளா் என்ற பண்பாடு மிக்க சமூகம் என, பிரதமா் நரேந்திர மோடி 2021 ஆம் ஆண்டு ஏழு உட்பிரிவுகளை இணைத்து பெயா் திருத்த அரசாணையை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொடுத்தாா்.

மேலும், மக்களவைத் தோ்தலில் ஏழு தனி தொகுதிகளில் தென்காசி, திருவள்ளூா், நாகப்பட்டினம் என மூன்று தொகுதிகளை தேவேந்திர குல வேளாளா்களுக்கு பாஜக வழங்கியுள்ளது. எனவே எங்கள் சமுதாயத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பாஜகவிற்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com