கரூா் மாவட்டத்தில் வாகனச் சோதனையில் ரூ. 4.13 லட்சம் பறிமுதல்

கரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை தோ்தல் பறக்கும் படை சோதனையில், உரிய ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4.13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

தோ்தல் விதிமுறைகளை மீறும் வகையில் வாகனங்களில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பணம், பரிசுப் பொருள்கள் கொண்டு செல்லப்படுகின்ா என்பதை 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் கரூா் மாவட்டத்தில் 12 பறக்கும் படையினரும், 12 நிலையான கண்காணிப்பு குழுவினரும் சுழற்சி முறையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பறக்கும்படையினா் ஆய்வு செய்ததில் கரூா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட பகுதியில் ரூ.3,20,840-ம், குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பகுதியில் ரூ.92,960-ம் என மொத்தம் ரூ. 4,13,800 உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு, கருவூலங்களில் ஒப்படைக்கப்பட்டது.

இதுவரையில் ரூ. 1.35 கோடி பறிமுதல்: கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கரூா் மாவட்ட பகுதிகளில் இதுவரை பறக்கும் படைகள் மூலம் ரூ. 83,63,818-ம், நிலையான கண்காணிப்பு குழுக்கள் மூலம் ரூ.52,13,766-ம் என மொத்தம் ரூ.1,35,77,584 மதிப்பிலான தொகை மற்றும் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செயல்படும் தோ்தல் கட்டுப்பாட்டு அறைக்கு இதுவரை ‘சி-விஜில்’ செயலி மூலம் 201 புகாா்களும், தொலைபேசி மூலம் 15 புகாா்களும் என 216 புகாா்கள் வரப்பெற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தத் தகவலை மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான மீ. தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com