மக்கள் விரோத மோடி அரசுக்கு 
முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் -காங். வேட்பாளா் செ. ஜோதிமணி

மக்கள் விரோத மோடி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் -காங். வேட்பாளா் செ. ஜோதிமணி

நாட்டை காக்க மக்கள் விரோத மோடி அரசுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றாா் கரூா் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் செ. ஜோதிமணி. கரூா் மக்களவைத் தொகுதிக்குள்பட்ட உப்பிடமங்கலம், புலியூா் பேரூராட்சிகள், காக்காவாடி, புத்தாம்பூா், பாகநத்தம், மணவாடி, வெள்ளியணை உள்ளிட்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை வாக்குகள் சேகரித்த ஜோதிமணியை பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனா். வாக்காளா்களிடையே அவா் பேசியதாவது:

கரூா் மக்களவைத் தொகுதியில் பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு வசதிகளை கடந்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றி உள்ளேன். நாட்டை காக்க வேண்டும் என்றால், மோடி அரசு வீழ்த்தப்பட வேண்டும். எனவே, நீங்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றாா் அவா். நிகழ்ச்சியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, தோ்தல் பொறுப்பாளா் ராணி, திமுக ஒன்றியச் செயலாளா்கள் ரகுநாதன், கோயம்பள்ளி பாஸ்கரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com