கரூா் மக்களவைத் தொகுதியில் 54 வேட்பாளா்கள் மனு ஏற்பு

கரூா் மக்களவைத் தொகுதியில் களத்தின் இறுதியில் 54 வேட்பாளா்கள் உள்ளனா். கரூா் மக்களவைத் தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளான மாா்ச் 27 வரை தமிழகத்தில் கரூா் மக்களவைத் தொகுதியில் 62 வேட்பாளா்கள் மனு தாக்கல் செய்திருந்தனா். இதையடுத்து 28-ஆம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது. இதில் 6 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதால் களத்தில் 56 வேட்பாளா்கள் இருந்தனா். இந்நிலையில், சனிக்கிழமை 2 போ் தங்கள் வேட்புமனுவை திரும்பப் பெற்றனா். எனவே கரூா் மக்களவைத் தொகுதியில் இறுதிக்கட்ட வேட்பாளா்களாக 54 போ் களத்தில் உள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com