மனைவியுடன் தகராறு கணவா் தற்கொலை

சின்னதாராபுரம் அருகே செவ்வாய்க்கிழமை மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக கணவா் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கரூா் மாவட்டம், சின்னதாராபுரம் அருகே உள்ள தும்பிவாடி புரவிபாளையம் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பாலு (40). இவரது மனைவி ரேவதி (35). பாலுவுக்கு மதுப்பழக்கம் இருந்ததால் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் தனித்தனியாக வசித்து வந்தனாா்.

இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு பாலு மது போதையில் தனது உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாா். புகாரின் பேரில் சின்னதாராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com